நடிகர் மஹத் மற்றும் யாஷிகா இருவரும் நெருக்கமாக இருந்துவந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சில நாட்கள் முன்பு இருவருக்கும் நடுவில் நட்பு மட்டுமே என மஹத் கூறிவிட்டதால் யாஷிகா தேம்பி தேம்பி அழுதார்.
அதன் பிறகு சமாதானமாகி தற்போது இருவரும் சகஜமாக பழகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொம்மை செய்யும் டாஸ்கின் போது மஹத் அணியின் பணபெட்டியை திருட யாஷிகா சென்றார். அதை பார்த்து கோபமான மஹத் ஓடிச்சென்று யாஷிகாவை கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கி கொண்டு வந்து கார்டனில் விட்டுவிட்டார்.
அதை பார்த்துக்கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.