நடிகை நமிதா கடந்த நவம்பர் 24-ம் தேதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார். திருமணதிற்கு பிறகு எங்கே சென்றார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
தற்போது பெங்களூருவில் தனது கணவருடன் குடும்ப வாழ்கையை மேற்க்கொண்டு வருகிறார் நமீதா. சமூக வளைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் இவர் சமீப காலமாக ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் மட்டுமே சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டுகிறார்.
இந்நிலையில், திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடை அதிகரித்துள்ளார் நமீதா. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.