நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் ‘தெறிக்குதா’ பாடல் காணொளி வெளியாகியுள்ளது.
ஒகஸ்ட் 2 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ‘தெறிக்குதா’ பாடலை அருண் ராஜா காமராஜ் மற்றும் லேடி காஷ் பாடியுள்ளனர்.
இதில் நடிகை ஜோதிகா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்னர்.
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் கலக்கலான நகைச்சவை நிறைந்த ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.