பொதுவாகவே ஹாலிவுட் நடிகைகள் உடல் அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பேஷன் உடைகள் அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அத்துடன் திரைப்படங்களில் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அரைகுறை ஆடையில் வந்து நிற்கிறார்கள்.Jennifer Lopez denim boots fans Excited
அந்தவகையில், இப்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் நிகழ்ச்சியொன்றுக்கு அணிந்து வந்த புது ரக பேஷன் ஆடை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டை மட்டும் அணிந்து கொண்டு ஜீன்ஸ் துணியை முழங்கால் அளவுக்கு ஷூ போன்று மாற்றி அணிந்து வந்து இருந்தார். இந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அதை செல்போனில் படம்பிடித்து இணையத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
மேலும், இந்த ஆடையை விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டு வந்து இங்குள்ள நடிகைகள் அணிந்தாலும் ஆச்சரியமில்லை என்று பலர் சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.