இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்த்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வாட்ச்மேன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு, ராஜ் அர்ஜூன், சக்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தை டபிள்மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இந்தப் படத்தின் விளம்பரப்பாடலில் நடிகை சயீஷா இடம்பெற்றுள்ளார். அதேநேரம் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நாய் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.