நடிகை ஜோதிகா – ரேவதி நடிப்பில் உருவாகியுள்ளார் ‘ஜாக்பாட்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி வெற்றி நடைபோடுகின்றது.
படத்திலிருந்து சினேக் பீக் காட்சி வெளியாகியுள்ளதுடன் இதில் பெண் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள ஆனந்த்ராஜின் நகைச்சவை நிறைந்த நடிப்பை பலரும் ரசித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.
கலக்கலான நகைச்சவை நிறைந்த ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.