விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘சேதுபதி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
அருண்குமார் இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘சேதுபதி’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி -ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருந்தனர்.
இத்திரைப்படதில் விஜய் சேதுபதி கம்பீரமான பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்நதார். அந்தவகையில், அதன் இரண்டாம் பாகத்திலும் அவர் பொலிஸ் அதிகாரியாகவே நடிக்கவுள்ளார்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கும் ஆர்வம் பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
ஏற்கனவே ‘எந்திரன்’, ‘விஸ்வரூபம்’, ‘சிங்கம்’, ‘சண்டக்கோழி’, ‘சாமி’, ‘திருட்டுப்பயலே’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
இதையடுத்து சூர்யாவின் ‘காக்க காக்க’, பிரசன்னாவின் ‘கண்ட நாள் முதல்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கும் முயற்சிகள் நடபெறுகின்றன.
இதுபோல் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011ல் வெளியாகி, வசூல் குவித்த ‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார்.