நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது.
பிரபல தொழிலதிபர் விசாகன் வணங்காமுடி என்பவரை செளந்தர்யா கரம்பிடிக்கிறார். திருமண வரவேற்பு விழா சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
திருமண வரவேற்பு அழைப்பிதழின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.