நடிகர் சூர்யா நடித்துவந்த NGK படம் சென்ற வருடம் தீபாவளிக்கே வந்திருக்கவேண்டியது, ஆனால் ஷூட்டிங் பாதியில் நின்றதால் படம் தள்ளிப்போனது.
பின்னர் பொங்கலுக்காவது வருமா என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்காமல் போனது. சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதனால் NGK படம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் கூறியுள்ளார். இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது முடிந்துவிட்டதாம். சூர்யாவின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார்.
இதனால் சோகத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
It has been a fantastic journey filming with the one and only @Suriya_offl sir. Truly amazed by his wonderful talent and dedication! We, team #NGK, take this moment to thank him from the bottom of our hearts!#NGKFire @prabhu_sr @thisisysr
— selvaraghavan (@selvaraghavan) January 12, 2019