நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் என்.ஜி.கே. படம் வெளிவருமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படம் என்.ஜி.கே. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. எனவே, ஒரு வருடம் ஆகியும் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை.