செக்ஸ் ஒன்றும் தீண்டதகாத விஷயமல்ல என நடிகை ரியாமிகா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரஜின் நடித்த குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரை பிரபலப்படுத்தியது எக்ஸ் வீடியோஸ் படம்தான்.
ரியாமிகா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சொந்த ஊர் பெங்களூரு. படித்தது மற்றும் வளர்ந்தது சென்னை என தெரிவித்துள்ளார்.
எக்ஸ் படத்தில் நடித்ததற்காக திரையுலகில் தன்னுடைய துணிச்சலுக்காக ஒரு பக்கம் பாராட்டினாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் அந்த மாதிரி படங்களில் நீ நடிக்கலாமா என நெகட்டிவ் விமர்சனம் கிடைத்ததாக தெரிவித்தார் ரியாமிகா.
செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமோ அல்லது பொது வெளியில் பேசக்கூடாத விஷயமோ இல்லை என்று தில்லாக கூறியுள்ளார் ரியாமிகா. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்றால், பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம் என்றும் ரியாமிகா கூறியுள்ளார்.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய சப்ஜெக்ட் இருக்கும் படத்தில் நடித்தோம் என்கிற திருப்தி தனக்கு எக்ஸ் வீடியோஸ் படத்தில் கிடைத்தது. இருந்தாலும், அடுத்து வரும் படங்களில் முழுக்கதையையும் கேட்ட பிறகுதான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார் ரியாமிகா.