செல்வராகவனின் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பிற்கிடையே கே.வி.ஆனந்த்தின் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த காப்பான் பட வேலையும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் கடைசி நேரத்தில் நடிகை பூர்ணாவும் இணைந்து நடித்து முடித்துள்ள தகவல் தற்போது தான் வெளிவந்துள்ளது. அவருக்கு இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்பதால் தகவல் அவ்வளவாக வெளியே வரவில்லை போலும்.
பூர்ணாவின் நடிப்பில் கடைசியாக மிஷ்கினுடன் நடித்த சவரக்கத்தி படம் வெளியாகியிருந்தது. அதன்பின் பட வாய்ப்புகள் வராததால் சிறிய கதாபாத்திரம் என்றாலும் பரவாயில்லை என்று இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டாராம்.