இயக்குநர் அருண் கார்த்திக் எழுதி, இயக்கிய ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துருவா, இந்தூஜா, ஷா ரா, ஏ.கே, ஷாலினி வாசன், டி.சிவா, ரவீந்தர் சந்திரசேகரன், ஜே.சதீஷ்குமார், திவாகர தியாகராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தில் துருவா கதாநாயகனாக நடிக்க, இந்துஜா அதிரடி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆதித்யா, ஷா ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் பாடல்களையும் இயக்குநர் அருண் கார்த்திக் எழுதியுள்ளார். ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார். ரத்தினமும் சுந்தர் ராம் கிருஷ்ணனும் இந்த படத்திற்கான ஒளிப்பதிவை கையாளுகின்றனர்.
நடிகை இந்துஜா ‘மேயாதமான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதன்பிறகு ‘மெர்க்குரி’, ’60 வயது மாநிறம்’, ‘பில்லா பாண்டி’, ‘பூமராங்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.