‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே நாம் அறிந்ததே.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.
ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார்.
யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.