பேட்ட படத்திற்கு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ரஜினி தற்போது தனது மகள் சௌந்தர்யாவின் திருமண வேலைகளில் மும்முரமாக இருப்பதால் எப்படியோ இன்னும் ஒரு மாதம் கழித்து தான் தலைவர் 166 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்காத யோகி பாபு ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஜய்யின் சர்கார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.