ரஜினியின் படங்கள் அடுத்தடுத்து வந்ததால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீண்ட வருடங்களாக தயாரான 2.0 படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வசூலில் கலக்கிறது.
அந்த பட கொண்டாட்டத்தின் போதே அடுத்து ரஜினி நடிப்பில் பேட்ட என்ற படம் வெளியானது. முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்த இப்படத்தை ஏகபோகமாக ரசிகர்கள் கொண்டாடிவிட்டனர்.
இப்படம் இப்போது வரை உலகம் முழுவதும் ரூ. 240 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் ரஜினியின் பேட்ட 11வது இடம் பிடித்துள்ளது. வரும் நாட்களில் படம் எப்படி வசூல் செய்கிறது என்பதை பார்ப்போம்.