நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று இயக்குனரான சுசிந்தரன் நேரடியாகவே சமீபத்தில் கூறியிருந்தார். சினிமா உலகில் பரபரப்பாக பார்க்கப்பட்ட இவ்விஷயத்திற்கு அஜித் எந்த பதிலும் கூறாவிட்டாலும் பல சினிமா பிரபலங்கள் இவரது கருத்திற்கு வழி மொழிந்தனர்.
இந்நிலையில் சுசிந்தரனின் இந்த கருத்தை கொலையுதிர் காலம் ப்ரஸ்மீட் மேடையிலேயே கிண்டலடித்துள்ளார், இயக்குனர் கரு.பழனியப்பன். இது குறித்து அவர் பேசுகையில், கொலையுதிர் காலம் நயன்தாரா நடித்துள்ள படம். ஆனால் அவரே விழாவில் கலந்து கொள்ளவில்லை.
நயன்தாரா கலந்து கொள்ளாததும் ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் அவர் இங்கு வந்திருந்தால் அவரையும் அஜித்தை போல் அரசியலுக்கு சுசிந்தரன் அழைத்திருப்பார்.
சுசிந்தரன் தான் யாருக்கு கூட்டம் கூடுகிறதோ அவர்களை எல்லாம் அரசியலுக்கு அழைக்கும் பழக்கம் வைத்திருக்கிறாரே. நல்லா நீந்தும் மீன் குட்டியை ரெண்டாக அறுத்து குழம்பில் போட்டு, எங்க மறுபடியும் நீந்த மாட்டிக்குதே என்று கேட்பார்கள் என்றார்.