சீரியல் ஏரியாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் விளங்குபவர் கோபி என்ற திருமுருகன். இவர் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ’நாதஸ்வரம்’ உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களின் பேவரைட் சீரியல்களாகும். சீரியல்கள் இயக்குவதோடு அதில் ஹீரோவாகவும் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டார்.
சீரியல்களுடன் பரத்தை வைத்து ‘எம்மகன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் திருமுருகன் தற்போது ’கல்யாண வீடு’ என்ற சீரியலை இயக்கி நடித்து வருகிறார்.
மக்களின் பேவரைட் சீரியலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், திருமுருகன் திடீரென்று தொலைந்து போனது போன்ற காட்சி வைக்கப்பட்டதோடு, அவர் சுமார் மூன்று மாதங்களாக சீரியலில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இது குறித்து விசாரித்ததில், திருமுருகன் மனைவி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதனால், மனைவியை பார்த்துக் கொள்வதற்காக சீரியலை ஒதுக்கிவிட்டு, அவருடனேயே மூன்று மாதங்கள் திருமுருகன் இருந்தாராம். இதனால் தான், அவர் சீரியலில் நடிக்கவில்லையாம்.
தற்போது அவரது மனைவி உடல்நிலை தேறி வந்துள்ளதால், மீண்டும் சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.