அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக வெளியான விஸ்வாசம் படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.
எல்லா இடத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, இந்த நேரத்தில் இயக்குனர் சிவா மற்றும் குழுவினரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
அதில் ஒரு பேட்டியில் சிவா பேசும்போது, அடிச்சுதூக்கு பாடலுக்கு நடன குழுவினர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரே டேக்கில் அவர்கள் அதை செய்துகொண்டிருந்தனர், அவர்களின் நடனத்தை தூரத்தில் இருந்து பார்த்த அஜித் அவர்கள் எங்கள் அருகில் வந்து அவர்களை முதலில் இருந்து ஆட கூறுங்கள் என்றார்.
அதை பார்த்து முடித்த அஜித் அவர்கள் பாடல்ள் போடுங்கள் என்று கூறி ஒரே டேக்கில் முழு பாடலையும் ஆடி முடித்தார்.
அவர் நடனம் ஆடி முடித்ததும் அங்கிருந்தவர்கள் விசில் அடித்து ஒரு திரையரங்க பீல் கொடுத்தனர். பின் அஜித் அவர்கள் சிவா இது உங்கள் பிறந்தநாளுக்கு என்னுடைய பரிசு என்றார். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சிவா பேசியுள்ளார்.