ராட்சஷன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார் பட்டி சிங்கம்… இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா நடித்துள்ளார்… இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது… படம் ஆரம்பித்ததிலிருந்து கிளைமேக்ஸ் காட்சி வரும் வரை படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது… இந்த திரைப்படம் முழுக்கவே கலர்ஃபுல்லாக இயக்குனர் எடுத்துள்ளார்… மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகை ஓவியா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்…
மேலும் ஒரு பாடலுக்கும் வருகிறார் இது ஓவியா ரசிகர்களையும் சந்தோசப்படுத்தி உள்ளது… இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்த்தால் கண்டிப்பாக வயிறு குலுங்க சிரித்து விடலாம் என்பது மட்டும் கேரண்டி… மேலும் இந்த திரைப்படத்தில் குறை சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை… இப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் ஆகவே இந்த சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளது… இந்த திரைப்படத்திற்கு நம் சேனல் தரக்கூடிய மதிப்பெண் 4/5