அண்மைகாலமான விஷ்ணு விஷாலின் படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தன் ரசிகர்கள் வட்டாரத்தை இன்னும் பிடித்து வைத்திருக்கிறார்.
அவரின் படங்கள் காமெடி, காதல் என கலந்த ஒரு மசாலாவாக வந்த மக்களை ஈர்த்துவிடுகிறது. அவர் நடிப்பில் கடைசியாக வந்த ராட்சஸன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாரம் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன். இப்படத்தை நடிகர் சாந்தனு பார்த்து மகிழ்ந்துள்ளார்.
படத்தில் பல காட்சிகள் தன்னை சிரிக்க வைத்துவிட்டதாகவும், இப்படி தான் சிரித்ததே இல்லை, என படத்தின் விஷ்ணு விஷாலை வாழ்த்தியுள்ளார்.
#SilukkuvaarPattiSingam Whatttee laugh riot ?????? I haven’t laughed so much in ages ?? @vishnuuvishal you’ve got a winner there once again Machan , enjoyed the film thoroughly ???
— Shanthnu Buddy (@imKBRshanthnu) December 23, 2018