சமூக வலைதளம் மூலம் ஒரே நாளில் ஓஹோவென பிரபலமானவர் பிரியா வாரியார். அதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு அடார் லவ் பட பாடல் தான். இதில் அவரின் புருவ, கண் அசைவுகள் அத்தனை இளைஞர்களையும் ஈர்த்தது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தெலுங்கிலும் லவ்வர்ஸ் டே என்ற பெயரில் வரவுள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார்.
இதில் பேசிய பிரியா வாரியால் ஒரே நாளில் நான் பிரபலமானதால் என்ன நடக்கிறதென தெரியாமல் என்னுடைய பெற்றோர் என்னை வீட்டு சிறையில் வைத்தார்கள்.
பாடலில் நான் கண்ணடிக்கும் காட்சி ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் இருந்தது. ஆனால் வைரலாகிவிட்டது. இதனால் தினமும் பேட்டிக்காக என வீட்டின் முன் பத்திரிக்கையாளர்கள் குவிந்து விட்டார்கள்.
கல்லூரியிலிருந்து வந்து தினமும் சீருடையில் பேட்டி கொடுத்த படி இருந்தேன். இதனால் கூடிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது தான் வீடியோ எப்படியான இரு சென்ஷேசன் ஆகிவிட்டது என புரிந்தது.