காதல் தோல்விகளுக்குப் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்ட சிம்பு, தத்துவஞானி போல பேசி வந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அவர் மீது இருந்த பயம் போய், அவரை வைத்து படம் எடுக்க விருப்பப்பட்டார்கள். ஆனால், அது நெடுநாட்கள் நீடிக்கவில்லை. அதற்குள் சிம்பு நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அவர் சரியாக கலந்துக்கொள்ளவில்லை என்று புகார் எழ, வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த ‘மாநாடு’ படத்திலும் அவர் முரண்டு பிடித்து வந்ததால், அவரையே நீக்கிவிட்டார்கள்.
தற்போது ‘மகாமாநாடு’ என்ற படத்தை சிம்பு இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்தாலும், அதை அவரது ரசிகர்களே நம்பாமல், அவர் மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
மறுபுறம் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அவர் மீது போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும், இந்த புகார் விவகாரத்திற்கு தயாரிப்பாளர் சங்கமே ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி, எப்போதும் போல வம்புகளில் சிக்கி வரண்டு போயிருக்கும் சிம்புவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆம், அவரது பழைய காதலியுடன் சிம்பு மீண்டும் சேரப்போவதாகவும், இது திருமணம் வரை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம், சிம்புவின் குடும்பம் தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் சிம்புவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்புவின் தம்பி மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் அவரது கணவர் என்று அனைவரும் ஜோடியாக நிற்க, சிம்பு மட்டும் தனியாக நின்றுக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த அந்த முன்னாள் காதலி நடிகை அப்செட்டாகி சிம்புவுக்கு போன் போட்டு ஆறுதல் கூறினாராம்.
இதில் இருந்து அவர்களின் பாழடைந்த பழைய காதல் மீண்டும் தூசு தட்டப்பட்டிருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொண்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை, என்ற அளவுக்கு நெருங்கிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
டி.ஆர்-ன் அத்திவரதர் தரிசனம் ஒர்க் அவுட் ஆகிடுச்சி போல.