தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. ரசிகர்கள் யாரை கொஞ்சம் வெறுக்கிறார்களோ அவரை பிக்பாஸ் வெளியேற்றிவிடுகிறார்.
இதனால் மக்கள் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள், கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை பற்றி தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், மீரா மிதுன் காரணமே இல்லாமல் பொய் பேசக் கூடியவர். சிம்பு, ஜீவா எல்லாம் மீரா மிதுனை காதலித்தார்களாம், அதனை அவரே சனம் ஷெட்டியிடம் கூறியிருக்கிறாராம்.
மீரா மிதுனை மட்டும் எல்லோரும் ஏன் தான் காதலிக்கிறார்களோ என காமெடியாக பேசியுள்ளார் சனம் ஷெட்டி.