சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘சாஹோ’ திரைப்படத்தின் மேக்கிங் காணொளி வெளியாகியுள்ளது.
Tanishk Bagchi இசையில் ‘காதல் சைக்கோ’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அனிருத் பாடியுள்ள அதன் பாடலின் மேக்கிங் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே டீசர் வெளியாகியுள்ள நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் ஹிந்தியிலும் நல்ல விலைக்கு போகும் என திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தெலுங்கில் மட்டும் அதிலும் குறிப்பாக ஆந்திராவில் இத்திரைப்படம் 115 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகிவருகின்றது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.