பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 68 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
350 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றுதான் கூறவேண்டும்.
பிரபாஸின் பாகுபலி திரைப்படம் முதல்நாளில் மட்டும் 121 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
அத்துடன் பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் 1810 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் பாகுபலி திரைப்படத்தின் சாதனையை சாஹோ திரைப்படத்தினால் முறியடிக்க முடியவில்லை என்பதை புலப்படுத்துகிறது.