நடிகரும், இயக்குனருமா ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரீஸ் பாரீஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் ஒரு பெண் காஜலிடம் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களை திசைதிருப்பும் வகையில் இடம்பெற்றுள்ள இந்த காட்சி உடனடியாக நீக்கப்படவேண்டும் என பலர் குரல்கொடுத்து வருகின்றனர். இதுவரை இந்த டீசரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள காஜல் பட டீசர்
