பாலிவுட் சினிமாவின் ஸ்டார் ஹீரோயின் கங்கனா ரணாவத். அதிக சம்பளம் வாங்கும் மிக சிலரில் இவரும் ஒருவர். காதல், மீடூ என சில சர்ச்சைகளில் இவரின் பெயர் அடிக்கடி இடம் பிடித்து விடுகிறது.
அவர் ராணியாக நடித்துள்ள மணிகர்னிகா படம் வரும் ஜனவரின் 25 ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். ஆனால் இது பாலியல் துன்புறுத்தலில் சேராது என அவரே கூறியுள்ளார்.
இதில் அவர் படப்பிடிப்பு தளத்தில் சில நடிகர்கள் ஈகோவுடன் நடந்துகொண்டார்கள். 6 மணி நேரத்திற்கு மேல் காக்க வைப்பது, தவறான நேரத்தில் ஸ்பாட்டுக்கு அழைத்து வர செய்து காக்க வைப்பது, கால்ஷூட் தேதிகளை தவறாக கொடுத்து வாய்ப்புகளை தவற செய்ய வைப்பது, படப்பிடிப்பை கடைசி நேரத்தில் கேன்சல் செய்வது என கூறியுள்ளார்.
மேலும் அவருக்கே தெரியாமல் வேறு ஒருவரை வைத்து அவருக்கு டப்பிங் செய்வது, பட விழாக்களுக்கு தன்னை அழைக்காமல் டிரெய்லரை வெளியிடுவது என பல துன்புறுத்தல்களை சந்தித்துள்ளாராம்.