முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து பின் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் படத்தில் தேர்தல் விசயத்தில் சொல்லப்பட்ட 49P சட்டம் பெரும் கவனத்தை பெற்றது. இணையதளத்திலும் இது அதிகம் தேடப்ப்பட்ட விசயமாக இடம் பிடித்தது.
இந்த விழிப்புணர்வால் மக்கள் நிச்சயம் அந்த சட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தில் சொல்லப்பட்ட விசயத்திற்கும் நிஜத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையம் சொல்லும் விசயம் என்ன வென்றால் உங்கள் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டார்கள் என்றால் 49P படிவத்தை நிரப்பி அதில் வாக்கை பதிவு செய்யலாம்.
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காக இருந்தால் மட்டும் தான் இது கணக்கில் கொள்ளப்படும். இதனால் வாக்காளர்களுக்கு தாம் வாக்களித்தோம் என்ற திருப்தி மட்டுமே கிடைக்கும்.
படத்தில் சொல்வது போல தேர்தல் எல்லாம் நிற்காது என்பது உண்மை தான். ஆனால் பலர் 49P படிவத்தை பயன்படுத்தியிருந்தால் மறுதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு தான்.
Glad, election commission is bringing awareness on #49p #Sarkar pic.twitter.com/SPnk71M7RR
— A.R.Murugadoss (@ARMurugadoss) March 7, 2019