சர்கார் படம் தளபதி விஜய் நடிப்பில் சென்ற தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விமர்சன ரீதியாக சிறிது கலவையாக இருந்தாலும், ஸ்டார் பவர் இந்த படத்தை கொஞ்சம் காப்பற்றியது.
இந்த நிலையில் நேற்று பல்வேறு படங்கள் களத்தில் இறங்க, சர்கார் தமிழகத்தில் எல்லா திரையரங்கில் இருந்தும் தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் சர்கார் சென்னையில் மட்டும் ரூ 14.85 கோடி வசூல் செய்துள்ளது, இருப்பினும், இவை மெர்சலை விட மிகவும் குறைந்த வசூல் தான்.
இதனால் சர்கார் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி ஆவரேஸ் ஸ்டேட்டஸை பெறுகிறது.