நடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது படங்கள் பெரிதளவில் இல்லை.
தெலுங்கில் இப்போது அவருக்கு யோகமான காலம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து அவரின் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மஜிலி படம் வெற்றியடைந்தது.
கடந்த வார இறுதியில் வெளியான ஓ பேபி படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ 17 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் வந்துள்ள இப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, நடிகர் நாக சௌர்யா, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.