தமிழ், தெலுங்கு என இரு சினிமா உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்ததை பற்றி கூறிய சமந்தா, தென்னிந்திய மொழியில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் எனக்கு மிகவும் சவாலாக அமைந்த வேடம் என்றால் இந்த சூப்பர் டீலக்ஸில் வரும் வேம்பு கேரக்டர் தான்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கேரக்டர் என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் டைரக்டரின் ஆலோசனைப்படி ரிகர்சல் எடுத்து நடித்தேன். இந்த வேடம் என்னை போலவே எனது ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றார்.