சமந்தாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
2014-ம் ஆண்டு வெளியான கொரியத்திரைப்படமான ‘மிஸ் க்ரானி’, சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில் தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.