சீரியல்கள் என்றாலே உடனே பலரின் நினைவிற்கு வருவது சன் டிவி தான். இதில் வரும் பல சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதோடு அதில் நடிப்பவர்களுக்கும் தீவிர ரசிகர்கள், ரசிகைகள் இருக்கின்றார்கள்.
அதே போல TRP யிலும் முதலிடத்தில் இருப்பது இந்த சானல் தான் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இதே சன் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தையும் தயாரித்திருந்தது.
ஏற்கனவே படத்திற்கு நன்கு புரமோஷன் செய்திருந்தார்கள். படத்திற்கும் நல்ல வரவேற்பும், வசூல் இருந்து வருகிறது. அண்மையில் இதே சானலில் கல்யாண வீடு சீரியலில் படத்திற்கு போவது போலவும், பாடலுக்கு ஆடுவது போலவும், படம் நன்றாக இருக்கிறது என்பது போலவும் காட்சிகள் இருந்தது.
இது பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் ரேவதி, தலைவாசல் விஜய் நடிக்கும் அழகு சீரியலிலும் தற்போது பேட்ட படத்தை விளம்பரம் செய்யும் படியான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அதுவும் எப்படி மரண மாஸ் பாடலும் சீரியலில் டான்ஸ் ஆடியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இது போல வேறெந்த நடிகருக்கு இருந்ததாக தெரியவில்லை. ரஜினிக்கு ஏற்கனவே மாஸ் இருக்கும்போது இவர்கள் இப்படி செய்வது சிலருக்கு ஏன் இப்படி என கேள்விகளை எழுப்பியுள்ளது.