நடிகர் சந்தானம் பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தாலும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆன பாடில்லை.
இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவந்த மன்னவன் வந்தானடி படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
இந்த படத்தை தயாரித்து வந்த சுஷாந்த் பிரசாத் என்பவர் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தொடர்ந்து தயாரிக்க முடியாத சூழ்நிலையில் படத்தின் உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு விற்க முடிவெடுத்துள்ளார்.
இதை எதிர்த்து ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் வழக்கு தொடுத்துள்ளார். உரிமையை வேறொருவருக்கு விற்க வேண்டுமென்றால் தன்னிடம் வாங்கிய பைனான்ஸ் தொகையை செட்டில் செய்யவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.