சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்துள்ள சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு “டிக்கிலோனா” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.