விஜயகாந்த் நடித்த படங்களில் மிகவும் பிரபலமான ஓன்று சத்ரியன். காவல் துறை அதிகாரியாக மிரட்டலான வேடத்தில் நடித்திருப்பார் விஜயகாந்த். இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் சிறு வயதில் தனது பெற்றோர்களை கொன்றவர்களை கொலை செய்து விட்டு பின்னர் சிறைக்கு சென்று ஒரு போலீஸ் அதிகாரியாக மாறுவர்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்திருப்பார். படத்தில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் நடித்திருப்பார் நடிகர் விஜயகாந்த். படத்தில் சிறுவயது கேரக்டரில் பன்னீர் செல்வமாக ஒரு சிறுவன் நடித்திருப்பான். அவர் வேறு யாரும் இல்லை அவர் ஒரு பிரபல இயக்குனர்.