தமிழ் சினிமா மற்றுமின்றி பாலிவுட்டிலும் ஒளிப்பதிவாளராக அதிகம் பிரபலமானவர் நட்ராஜ். இவர் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நட்டி நேற்று இரவு திடீரெனெ ட்விட்டரில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா படத்தில் ஒரு பாடலில் நடித்தது பற்றி குறிப்பிட்டு, என்னை இயக்குனர் சுசீந்திரன் மற்றும் மேனேஜர் ஆண்டனி ஆகியோர் ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.