அஜித் என்றால் சினிமாவை தாண்டியும் மக்கள் மத்தியிலும், அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல மரியாதை இருக்கின்றது. அண்மையில் அவர் விட்ட அறிக்கை சமூகவலைதளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது.
இதில் அவர் தன் அரசியல் முடிவை மிகவும் தெளிவாக எடுத்துக்கூறிவிட்டார். ரசிகர்களை செய்கையால் அவருக்கு விரிக்கப்பட்ட அரசியல் வலைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனை ஆளும் கட்சியை சேர்ந்த பலர் வரவேற்றதோடு அவரின் தைரியமான முடிவை வாழ்த்தினர். இந்நிலையில் பிரபல பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் என்பவர் அஜித் சரியாக சொன்னார். நான் விஸ்வாசம் படத்தை பார்க்க போகிறேன் என கூறியுள்ளார்.
Well said Thala #AjithKumar – now I want to watch #Viswasam
— Sanjay Subrahmanyan (@sanjaysub) January 23, 2019