தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தன் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். இவரின் இளைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த வருடம் திருமணம் முடிவடைந்த நிலையில், தற்போது இவரின் மூத்த மகள் அபிநயாவிற்கு திருமணம் நடைபெற்றது.
பார்த்திபன் – சீதாவின் மூத்த மகள், அபிநயாவிற்கும் பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரனும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் நரேஷ் கார்த்திக்கும் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களுடைய திருமணம் சென்னை அடையாறு லீலா மகாலில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் ராதா ரவி, லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் சந்திரசேகர், பாக்யராஜ், சிவக்குமார், கார்த்தி, ராதிகா, நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் மூலமாக இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
