நடிகர் விஷால் இன்று கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக இருந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் அவர் மீது சிலர் குற்றம் சாட்டிவந்தனர். அவர் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தின் சாவியை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சிலர் முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனால் விஷால் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது அவர் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் முறையாக விண்ணப்பித்து கணக்கு கேட்டால் நிச்சயம் சொல்வோம், தவறு செய்திருந்தால் ஜெயிலுக்கு போகவும் தயாராகவும் உள்ளேன் என கூறியுள்ளார்.
Hope Justice Prevails…. pic.twitter.com/78UOVObOrv
— Vishal (@VishalKOfficial) December 20, 2018