பலரும் அறிந்த நடிகை பாக்ய ஸ்ரீ. ஹிந்தி சினிமாவில் அவர் சல்மான் கான் நடித்த மேனே பியார் கியா படம் மூலம் அறிமுகமானவர். அதே துறையை சேர்ந்த தயாரிப்பாளார் ஹிமாலயா தசானியை திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். பாக்ய ஸ்ரீயின் கணவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கடந்த செவ்வாய் கிழமை போலிசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தசானி 1992 ல் பாயல் படத்தில் நடிக்க தொடங்கியவர். அவரின் மகன் அபிமன்யூ அண்மையில் ஹீரோவாக அறிமுகமானவர்.
இந்நிலையில் தசானி கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.