ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய்பல்லவி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அம்மணி.
இந்நிலையில், இயக்குனர் சுதிர் வர்மா இருக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் சாய்பல்லவி. இந்த படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், கல்யாணி ப்ரியதர்ஷன் என்ற இன்னொரு நாயகியும் நடிக்கிறார். இதுவரை தான் நடித்த படங்களில் புடவை, சுடிதார், தாவணி சகிதமாக நடித்துவந்த சாய் பல்லவி இந்த படத்தில் கிளாமர் உடைகளை அணிந்து நடிக்கவுள்ளார். இந்த தகவல்கள் சாய்பல்லவி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6-ம் தேதி துவங்கியது. விசாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெறும் என தெரிகிறது.
தன்னுடைய கவர்ச்சி விருந்துக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பார் கோத்தகிரி அழகி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.