சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.
சமீபத்தில் பார் ஒன்றில் அமர்ந்தபடி கையில் ஒயின் கிளாஸுடன் போஸ் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா. பார்த்தவுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
என்னிடம் இருப்பதில் இது தான் பெரியது என அந்த ஒயின் ஃகிளாசை குறிப்பிட்டு கூறியுள்ளார்.