சர்கார் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்தில் நடிக்கிறார் என ஒரு செய்தி உலா வருகிறது. இருப்பினும் அதுபற்றி இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்து பாலிவுட்டில் நுழைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் முதல் ஹிந்தி படத்தை Badhaaai Ho பட புகழ் அமித் சர்மா இயக்குகிறார்.
தல அஜித்தின் அடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் கீர்த்தி சுரேஷ் படத்திற்கும் தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.