நடிகை அனுஷ்கா சர்மாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையான இவர் படத்திற்கு ரூ 8 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
கிரிக்கெட் கேப்டனான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் அனுஷ்காவுக்கு பரி, சஞ்சு, சுய், தாகா, ஜீரோ ஆகிய படங்கள் வந்தன.
விளம்பரங்களில் நடித்தும் கோடிகளை சம்பாதிக்கும் அவர் புகையிலை விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த வீடியோ வெளியாக சர்ச்சையாகிவிட்டது.
இதனால் கோபமான ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதில் ஒருவர் நீங்கள் புகையிலையை விளம்பரம் செய்தால் ரசிகர்களுக்கு வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட உங்களுக்கு பணம்தான் முக்கியமா? என்று அனுஷ்கா சர்மாவிடம் ஒரு டாக்டர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கணவர் விராட் கோலி தீங்கு ஏற்படுத்தும் எதையும் விளம்பர படுத்தமாட்டேன் என்கிறார். மனைவியோ புகையிலை விற்கிறார் என்று இன்னொருவர் விளாசியுள்ளார்.