தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பேரழகி. ஏழ்மையிலும் டஸ்கி கலரிலும் இருக்கும் பெண் சினிமா துறையில் சந்திக்கும் கஷ்டங்கள் என வித்தியாசமாக கதை நகர்வதால் ரசிகர்களிடையே இந்த சீரியல் வேகமாக பிரபலமாகி வருகிறது.
இதில் விராட்- காயத்ரி என்கிற ஜோடி ஹீரோ- ஹீரோயினாக நடித்து வருகிறது. இந்த நிலையில் காயத்ரியை பற்றி பேட்டி ஒன்றில் விராட் பேசுகையில், எனக்கு அவருக்கும் சந்தித்து பேசக்கூடிய சூழல் இல்லை என்பதாலோ என்னவோ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசுறதே மிக மிக குறைவு.
அவரும் நானும் நடிக்கும்போது வசனம் மூலமாக பேசி கொள்வதோடு சரி, தனிப்பட்ட முறையில் பேசுவதில்லை என்கிறார். மேலும் இச்சீரியலில் விரைவில் எங்கள் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது எனவும் கூறினார்.