பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன்னர் வெளியாகியது.
இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் காப்பான் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் செப்டெம்பர் 20ஆம் திகதி படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.