நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆரம்பித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கிவருகிறார்.
அவர் சமீபத்தில் நடத்த விழா ஒன்றில் தான் சந்தித்த காதல் தோல்விகள் பற்றி பேசியுள்ளார். 9ம் வகுப்பு படிக்கும்போதே டாப்ஸி காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
“நான் கொஞ்சம் லேட் தான். 9ம் வகுப்பில் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 10ம் வகுப்பு போர்டு எக்ஸாம் வருகிறது, அதனால் பிரிந்துவிடலாம் என கூறிவிட்டான். அந்த காலத்தில் செல்போன் இல்லை. அதனால் என் வீட்டின் அருகில் உள்ள PCOக்கு சென்று ‘என்னை ஏன் விட்டு செல்கிறாய்” என போன் செய்து கதறி அழுவேன்” என டாப்ஸி கூறியுள்ளார்.