இலங்கை தமிழரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நேத்ரா’ திரைப்படம், காதலர் தின சிறப்பு வெளியீடாக இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை, கனடா வாழ் இலங்கை தமிழரான பரராஜசிங்கம் தயாரித்துள்ளார்.
வினய், தமன் குமார், சுபிக்ஷா நடிப்பில் நட்பையும், காதலையும் விளக்கும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இவர்களுடன் ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட பலர் தோன்றி நடித்துள்ளனர்.
ஏ.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.